actress mohini latest news: திரை உலகில் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வெற்றியை பெற்றதன் காரணமாக தமிழ் மொழி மட்டுமில்லாமல் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வந்த நமது நடிகை மோகினி பிரபலமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.
திரை உலகில் மகாலட்சுமி என்ற பெயரில் தான் நடிகை மோகினி முதன்முதலாக அறிமுகமானார் இவருடைய பூனை கண்களை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது இவ்வாறு பிரபலமான நமது நடிகை இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் முதன் முதலாக தமிழில் அறிமுகமான திரைப்படம்தான் ஈரமான ரோஜாவே இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே மாபெரும் ஹிட்டுக் கொடுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் நடித்த புதிய மன்னர்கள் நாடோடி பாட்டுக்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் தன் பிரபலமாக இருக்கும் போது பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் நமது நடிகைகளோடு மகன் இருக்கிறார் இந்நிலையில் தன்னுடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தற்போது விவாகரத்து பெற்று அமெரிக்காவில் கிறிஸ்தவமத போதகராக விளங்கி வருகிறார்.