கருப்பு நிற புடவையில் ஹாட் கிளிக் புகைப்படங்களை வெளியிட்ட மிருனாலினி ரவி..

Actress Mirnalini Ravi Photo: சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மிருனாலினி ரவியின் ஹாட் கிளிக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மிருனாலினி ரவி இவர் இதற்கு முன்பு தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார்.

இதனை வைத்து தான் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வந்தது.

விஜய்யால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிய விடாமுயற்சி டீம்.!

அப்படி டிக் டாக் மற்றும் டப்மாஸ் மூலம் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட அதன் மூலம் பிரபலமான இவர் புதுவையில் பிறந்தவர். 2019ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

Mirnalini Ravi Photos
Mirnalini Ravi Photos

இதனை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நடித்து வந்த இவர் எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, விஷாலின் எனிமி போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார். முக்கியமாக எனிமி படத்தில் இடம்பெற்று இருந்த மால டும் டும் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.

Mirnalini Ravi Photos
Mirnalini Ravi Photos

தெலுங்கில் கடைசியாக மாமா மஸ்ஜித்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து பிஸியாக இருந்து வரும் மிருனாலினி சமீபத்தில் கருப்பு நிற புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.