வித்தியாசமான காஸ்ட்யூமில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை மேக ஆகாஷின் புகைப்படங்கள்.!

MEHA-AKASH
MEHA-AKASH

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகை மேகா ஆகாஷ். இவரும் மற்ற நடிகைகளை போல தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதன் மூலம் லட்சக்கணக்கான பாலோசர்களையும் வைத்துள்ள இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலம் ஏராளமான லைக்குகளையும் பெற்று வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர்களின் கண்ணை பறிக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த லைதிரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து சிம்புக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன், ரஜினியுடன் இணைந்து பேட்ட, நடிகர் தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கா கதை, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு தமிழில் தொடர்ந்து நடித்து வந்த இவர் மேலும் தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே விரைவில் தமிழ் திரைப்படங்களில் நடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மேகா ஆகாஷ் தற்போது மிகவும் ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.