actress megna raj latest news viral in social media: தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேக்னா ராஜ் இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி இருந்தாலும் அதன் பிறகு எந்த ஒரு பெரிய திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்தது மட்டுமல்லாமல் அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார் இவ்வாறு கன்னட சினிமாவில் நடிக்கும் பொழுது நடிகர் அர்ஜுனின் உறவினரான ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு திருமணம் நடந்து மிக சந்தோஷமாக வாழ்க்கையை கடந்து வந்த நமது நடிகையின் கணவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எழுதிவிட்டார். இவ்வாறு அவர் இந்த உலகை விட்டு செல்லும் பொழுது நமது நடிகை கர்ப்பமாக இருந்தார் இதன் மூலமாக தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து 9 மாதங்கள் நிரம்பிய நிலையில் நமது நடிகை மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கலந்துகொண்ட சூட்டிங் ஒன்றின் புகைப்படத்தைக் கூட பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளேன் என்று ஒரு பதிவினையும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட பதிவை நடிகை நஸ்ரியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதிலும் பச்ச குழந்தை இருக்கும் போது நடிப்பு தேவையா என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.