லேடி சூப்பர்ஸ்டார் முதல் 14 நடிகைகள் என்னை தான் காப்பியடிக்கிறார்கள்!! லிஸ்ட் வெளியிட்ட மீரா மிதுன்.

meera-mithun-1
meera-mithun-1

இணையதளத்தில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன்.  மாடல் அழகியான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் தொடர்ந்து பல நடிகர்,நடிகைகள் மற்றும் அவர்களின் மனைவியின் மீது சர்ச்சைக்குரிய தகவல்களை இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்களையும் அவரின் மனைவியையும் மிகவும் அவதூறாக பேசி வந்தார். இதற்காக பல பிரபலங்கள், ரசிகர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நான் கடந்த 17 நாட்களாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவது இல்லை நான் மிகவும் மனமுடைந்து உள்ளேன் என் முகத்தை அனைவரும் திருடுகிறார்கள். எனவே தற்கொலை செய்யும் நிலைக்கு நான் வந்துவிட்டேன் எனக்கு இந்தியாவில் இருக்கவே பிடிக்கவில்லை என்று அழுது புலம்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து லாஸ்லியாவை குறிவைத்து என் முகத்தையும் என் உடையையும் காப்பியடித்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் என்று கூறிய லாஸ்லியாவின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.இதற்காக பல ரசிகர்கள் மீராமிதுவிற்கு எதிராக கமெண்ட் செய்துவந்தார்கள்.

 

இந்நிலையில் தற்பொழுது என் முகத்தை திருடிய அனைத்து நடிகைகளின் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி,என் முகத்தை திருடியவர்கள் நடிகை ரம்யா பாண்டியன், யாஷிகா, சாக்ஷி அகர்வால், ஷிவானி, அபிராமி, ஐஸ்வர்யா தாத்தா, பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், லாஸ்லியா, கீர்த்தி சுரேஷ்,திரிஷா, நயன்தாரா, மாளவிகா சுருதிஹாசன் போன்ற பல நடிகைகளின் பெயரை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.