வீட்டைவிட்டு துரத்தப்பட்டதால் சோற்றுக்கே வழியில்லாமல் தற்கொலை முயற்சியில் நடிகை மீராமிதுன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

meera-mithun

சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திறியும் ஒரு நடிகை என்றால் அது மீராமிதுன் தான் இவர் சிறந்த நடிகை மட்டுமில்லாமல் மாடல் அழகியும் கூட அந்த வகையில் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தன்னை தானே சிறந்தவள் என்று பிரபல நடிகை என்றும் சொல்லிக் கொள்வது வழக்கம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை செய்து வந்ததன் காரணமாக பாதியிலேயே  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமில்லாமல் அதன் பிறகும் அவருடைய வாய் ஓயவில்லை பல்வேறு பிரபலங்களையும் இணையத்தில் வம்புக்கு இழுக்க ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தது மட்டும் இல்லாமல் அவர் தற்கொலை செய்து கொள்ள  போனதும் தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் தற்போது மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வருவதாக மீராமிதுன் கூரியுள்ளார்.

அந்த வகையில் பேட்டியில் பேசிய நமது நடிகை மன அழுத்தம் அதிகமாக ஆகிவிட்டது காரணமாக தனக்கு வாழவே பிடிக்கவில்லை ஆகையால் எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தான் அதிக அளவு வந்துகொண்டிருக்கிறது என்று கூறினார் மேலும் இவ்வாறு என் மனநிலை மாறி இதற்கு முக்கிய காரணம் இந்த சமுதாயம் தான் காரணம் இனிமேல் நான் என்னதான் மாறினாலும் இந்த சமுதாயம் என்னை ஏற்றுக்கொள்ளாது என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னால் தற்போது வேலைக்கு போக முடியவில்லை ஷூட்டிங் போக முடியவில்லை கோர்ட் கேஸ் போன்றவற்றில்  என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது இதனால் எனக்கு வருமானம் சுத்தமாக இல்லை மேலும் என்னுடைய வீட்டிலும் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். என மீரா மிதுன் கதறியது மட்டுமில்லாமல்  மறுபடியும் நான் சாதித்ததை இந்த உலகம் மறந்துவிட்டது என்று கூறி வருகிறார்.

மேலும் சினிமாவில் நடிகைகள் கிளாமராக உடை அணிந்து வந்தால் அவர்களை பாராட்டி வருகிறார்கள் அதுவே நான் செய்தால் என்னை கேவலமாக பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். மேலும் நான் அணியும் ஆடை குறித்தும்  என்னுடைய கேரக்டர் குறித்தும் அடிக்கடி கேஸ் போட்டு வருவது அவர்கள் அனைவருக்கும் வழக்கமாகிப் போய்விட்டது. இந்த சமுதாயம் என்னை வாழ விடமாட்டார்கள் என்ற ஆதங்கத்தில் தான் நான் கோபமாக பேசி வருகிறேன்.

அதுமட்டுமில்லாமல் சுமார் ஆறு வருடங்களாக என் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. என்னதான் நான் மன்னிப்பு கேட்டாலும் என்னை விடுவதுபோல் கிடையாது. தற்போது சோற்றுக்குக் கூட வழியில்லாமல் தவிர்ப்பதன் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை ஆகையால் இனிமேல் நான் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என கண்ணீர் மல்க நடிகை மீரா மிதுன் பேசியுள்ளார்.