தன்னைத்தானே ஒரு சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு இணையத்தில் பல்வேறு சர்ச்சையை உருவாக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் சமீப காலமாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளை வம்புக்கு இழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் சூர்யா விஜய் உள்ளிட்ட பலரை பற்றி பேசியது மட்டும் இல்லாமல் அவர்களின் குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசி உள்ளார் இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் மக்களையும் தரக்குறைவாக பேசி உள்ளார் இதன் காரணமாக அவர் மீது வழக்குத் தொடுத்து உள்ளார்கள்.
இந்நிலையில் கேரளாவில் தலைமறைவாக ஆன நமது மீராமிதுன் சில தினங்களுக்கு முன்பாக தான் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னைக்கு அவரை கொண்டு வந்து தீர விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் தெரிந்தது சிறுவர்களை வைத்து சில தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தன்னை கைது செய்தால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று கூறுவது மட்டுமல்லாமல் காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள வந்தார்கள் என பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் தனிமையில் அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வது மட்டுமில்லாமல் கேட்கும் கேள்விக்கு பதில் கூறாமல் வேறு ஒரு பதிலை கூறி காவல்துறை அதிகாரிகளை டென்ஷன் ஆக்கி வருகிறார்.
இதன் காரணமாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதன் காரணமாக மருத்துவரின் உதவியுடன் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போகிற போக்கை பார்த்தால் மீரா மிதுன் மெண்டல் என கூறி ஹாஸ்பிட்டலில் அடைத்து வைத்து விடுவார்கள் போல என பலரும் கூறி வருகிறார்கள்.