கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.பிக் பாஸ் வீட்டில் சென்றதிலிருந்து சர்ச்சையான விஷயங்களை பேசி மற்ற போட்டியாளர்களை திணறடிக்க செய்தவர்.
பிக் பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பலரும் மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மற்ற போட்டியாளர்களுக்கு படவாய்ப்புகள் கிடைத்தது.
அதேபோல மீரா மிதுன் அவர்களுக்கும் பட வாய்ப்பு கிடைத்தது. அந்த பட வாய்ப்பு ஏதோ சில காரணங்களால் கை நழுவி போனது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மீரா மிதுன். தற்போது பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை தினரடித்து வருகிறார். அதுபோல தற்போதும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்..
மேலும் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது உங்கள் உடலில் செக்ஸியான பாகம் என்றால் அது உங்கள் மனசு தான் என்று கூறியுள்ளார்.
Your Sexiest Body Part Is Your Mind ? pic.twitter.com/e5MmFAQMsW
— Meera Mitun (@meera_mitun) March 30, 2020