தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி அவர்கள் தான் இயக்கியுள்ளார்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை மீரா ஜாஸ்மின் சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
அந்த வகையில் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் மிக பிஸியாக திரைப்படம் நடிக்க ஆரம்பித்ததும் மட்டுமில்லாமல் திரையில் பிரபலமாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.
அந்தவகையில் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் 7 வருடங்களுக்கு பின்பாக நமது நடிகை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முன்வந்துள்ளார் ஆம் அந்த வகையில் மீரா ஜாஸ்மின் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் நடிகை மீராஜாஸ்மின் புடவை அணிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஐடி கார்டு மற்றும் மாடர்னான ஹேர் ஸ்டைல் என பார்ப்பதற்கு கல்லூரி ஆசிரியை போல காட்சி அளித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த அந்த வீடியோ இதோ.
— Tamil360Newz (@tamil360newz) December 10, 2021