மீனாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? பேங்க் பேலன்ஸ் மட்டுமே இவ்வளவா!

meena
meena

Meena net worth: நடிகை மீனா தனது 46வது பிறந்தநாள் இன்று கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான மீனா பிறகு ஹீரோயினாக அறிமுகமாகி தற்பொழுது சக்சஸ்புல் கதாநாயகியாக இருந்து வருகிறார்.

அழகாக கியூட்டாக இருந்த மீனாவை சிவாஜுக்கு மிகவும் பிடித்துப் போக பிறகு தனது பொறிக்கப்பட்ட நெஞ்சங்கள் என்கிற படத்தின் மூலம் மீனாவை சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தினை தொடர்ந்து ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

அதில் சூப்பர் ஸ்டார் மீது அமலாதி ரஜினியின் மீது பிரியம் கொண்ட குட்டி ரசிகையாக நடித்து அசத்தினார் மீனா. இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் என் ராசாவின் மனதிலே படத்தின் மூலம் சோலையம்மா என்ற முக்கியமான கதாபாத்திரத்தை நடித்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் இந்த படத்தை கஸ்தூரிராஜா இயக்க பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

இவ்வாறு தற்போது வரையிலும் தொடர்ந்து நடித்து வரும் மீனா வித்யாசாகர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வித்யாசாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதனால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கணவரை இழந்த சோகத்தில் இருந்து வந்த மீனா தனது தோழிகளின் உதவியுடன் தற்போது தான் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் பேங்க் பேலன்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர் ஒரு பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார் அவருக்கு மாதம் சம்பளம் 3 அல்லது 4 லட்சம் இருக்கும்.

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வித்யாசாகர் தனது சொத்துக்களை மீனா மற்றும் மகள் பெயரில் எழுதி வைத்தார். இதனை அடுத்து மீனாவும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் பணத்தை பேங்கில் டெபாசிட் செய்துள்ளார். இதனால் அவருடைய பேங்க் பேலன்ஸ் பலகோடி இருக்குமாம். அப்படி இவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூபாய் 35 கோடியில் இருந்து 40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.