தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்துக்கு பெருசாக பப்ளிசிட்டி படிக்காது மேலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்குப் பெறாமல் இருந்து வரும் நிலையில் இவர் குறித்த பல தகவல்களை ஏராளமான பிரபலங்கள் பகிர்ந்து உள்ளனர். அப்படி அவர்கள் கூறுகையில் அஜித் பிறருக்கு உதவும் மனம் கொண்டவர் எனவும், அனைவரையும் நேசிக்க தெரிந்தவர், அனைவருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர், தலைகனம் இல்லாதவர் என பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது அஜித்துடன் காதல் மன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்த மானு அஜித் குறித்த பேசி உள்ளார். டான்சராக பணியாற்றி வந்த நிலையில் பிறகு 1998ஆம் ஆண்டு வெளிவந்த காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் மானு. இந்த திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மானு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் தவிப்பு, காதர், பாசம், கோபம் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மானு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் காதல் மன்னன் படத்தில் அஜித் போன்ற ஒரு நடிகரோடு இணைந்து பணியாற்றியது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் மேலும் காதல் மன்னன் படம் இன்னமும் மக்கள் மத்தியில் பேசப்படுவதற்கு மொத்த காரணமும் பட குழுவு தான் எனக் கூறிய மானு அஜித் சிறந்த நடிகர், ரொம்பவே எளிமையானவர் என புகழ்ந்து பேசி உள்ளார்.
காதல் மன்னன் படப்பிடிப்பின் பொழுது தான் எப்போதும் அஜித்தின் பெற்றோருடன் தான் இருப்பேன், காதல் மன்னன் தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் பயப்படாத அளவுக்கு அஜித் தன்னை பார்த்துக் கொண்டார் எனவும் அஜித் ஒரு சிறந்த மனிதர் அவரை எல்லோருக்கும் பிடித்துள்ளது என மானு கூறியுள்ளார்.