Ajith Kumar: முதல்வரின் பேத்தியாக இருந்தாலும் தன்னை கட்டாயப்படுத்தி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்ததாக பிரபல நடிகை கூறி உள்ளார். சமீப காலங்களாக அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தோல்வி அடைந்த படங்களும் இருக்கிறது.
அப்படி தோல்வியை சந்தித்து வந்த காலகட்டத்தில் அஜித் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றுதான் காதல் மன்னன். 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன் படத்தினை சரண் இயக்க அஜித்துடன் இணைந்து விவேக் மற்றும் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். காதல் மன்னன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இப்படத்தில் அஜித்தும் ஹீரோயின் மானுவிற்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி தான். இந்த படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான மானு பிறகு சினிமாவை விட்டு விலகி சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார்.
இவ்வாறு திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் சமீபத்தில் காதல் மன்னன் படத்தில் தன்னை வற்புறுத்தி நடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது நடிகை மானு கூறியதாவது, தனது குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்ததில்லை. என் குடும்பத்தினர் பெரும்பாலானோர் டாக்டர்கள் தான்.
என்னுடைய தாத்தா கோபிநாத் பர்டோலால், அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நான் படிப்பதற்காகத்தான் சென்னைக்கு வந்தேன் ஸ்கூல் படிக்கும்பொழுது விவேகம், சரண் என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினேன் பின்னர் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என் கணவரும் டாக்டராக தான் உள்ளார் என மானு கூறிவுள்ளார்.