மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தமிழிலும் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை மஞ்சிமா மோகன். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார் பிறகு தமிழில் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் சத்திரியன்,தேவராட்டம், எப்ஐஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது ஏஎல் விஜய் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மஞ்சிமா மோகன் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தை விட தற்பொழுது மிகவும் குண்டாக இருப்பதால் பலரும் இவரை உருவ கேலி செய்து வருகிறார்கள்.
எனவே மஞ்சிமா மோகன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் “எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம், சிலருக்கு இயற்கையாகவே உள்ளது இதற்கு யாரையும் குறை கூறக்கூடாது முடியாது அதனால் தயவு செய்து ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வதை நிறுத்துங்கள் நீங்கள் கேலி செய்தால் அவர்களின் எடை குறையாது, குண்டம்மா, அந்தப் பையன் பாவம் என சிலர் கேலி செய்கிறார். ஆனால் எடை அதிகரிப்பது என்பது எனது தனிப்பட்ட விஷயம், இதுபற்றி யாரும் கருத்து கூற வேண்டாம்” என பதிலடி கொடுத்துள்ளார்.