இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆராவரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். நாளை வெளியாக உள்ள துணிவு படத்திற்காக ரசிகர்கள் இந்த இரண்டு நாளாகவே கட் அவுட் வைத்து போஸ்டர் ஒட்டி ஆறாவரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் துணிவு படத்துடன் எட்டு வருடங்கள் கழித்து விஜயின் வாரிசு படமும் வெளிய உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிள்ள வாரிசு படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களின் சம்பளம் விவரம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தில் நடித்ததற்காக நடிகை ராஸ்மிகாவின் சம்பளம் விவரம் கூட சமீபத்தில் வெளியாகியது. அதாவது வாரிசு படத்தில் விஜயுடன் நடித்ததற்காக நடிகை ரஷ்மிகா மந்தானா 4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடித்ததற்காக நடிகை மஞ்சு வாரியரின் சம்பளம் குறித்த தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது துணிவு படத்தில் நடித்த நடிகை மஞ்சுவாரியாருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது துணிவு படம் நாளைக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகருடன் நடித்த மஞ்சுவாரியார் இந்த படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.