துணிவு பட நடிகை மிகவும் ஸ்டைலாக உலா வரும் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் மஞ்சுவாரியார் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார் மீண்டும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்த இவர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார்.
மேலும் நடிகை மஞ்சு வாரியார் நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் மலையாளத்தில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளாரோ அதேபோல இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் இவர் அசுரன், சென்டிமீட்டர் உள்ளிட்ட இன்னும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது துணிவு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவா இருந்து வரும் இவர் நடிகர் அஜித்தை போலவே பைக் ரைடில் ஈடுபட்டு வந்தார்.

அது குறித்து புகைப்படங்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள் மேலும் இவர் நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட், கூலிங் கிளாஸ் தலையில் கேப், பேக் மாட்டிக்கொண்டு மிகவும் ஸ்டைலாக இருக்கும் உங்களுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
