ஆதலால் காதல் செய்வீர் பட நடிகை கணவர் இவர்தான்.! சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பொதுவாக சினிமாவில் உள்ள சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது இல்லை. அந்தவகையில் சில படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மனிஷா யாதவ்.

இவர் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல் செய்வீர், ஜன்னல் ஓரம்,ஒரு குப்பை கதை உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் இவரும் ஒரு கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஆனந்தி அடுத்ததாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மனிஷா யாதவ் தான் நடித்து இருந்தார்.

இதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு warnid என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் .திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிப்பது இல்லை சோஷியல் மீடியாவில் மட்டும் சில புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மனிஷா யாதவ் தனது கணவருடன் திருமணத்தின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.