கிளாமர் புகைப்படத்தால் வந்த புதிய வினை செம்ம கடுப்பில் நடிகை மாளவிகா மோகனன்.! நடந்தது என்ன.?

malavika-mohanan-
malavika-mohanan-

மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் இவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானர். முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் என்பதால் இவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். இரண்டு படங்களிலுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இப்பொழுது ராசியான நடிகையாக மாளவிகா மோகனன் மாறி உள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் திரைப் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படமும் வெகு விரைவிலேயே வெளியாக ரெடியாக இருக்கிறது தொடர்ந்து  படங்களில் நடித்து வருவதால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை மென்மேலும் உயர்ந்து கொண்டால் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு மாடல் அழகி என்பதை வெளிகாட்டும் வகையில் போட்டோ ஷூட் அதிகமாக அள்ளி வீசி வருகிறாராம்.

ஆம் நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்கள் தான் அதிகம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இப்பொழுதுகூட நடிகை மாளவிகா மோகனன் தனித்தீவு ஒன்றில்  கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வந்தார் இந்த நிலையில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சில பதிவுகளையும் போட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர் கூற வருவது : சில மாதங்களுக்கு முன் மாளவிகா மோகனன் எடுத்த புகைப்படத்தை போட்டோஷாப் செய்து இதை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதாக கூறினார் இதனால் வருத்தத்திலும் இருப்பதாக தெரியவருகிறது. இதுபோன்ற போலியை கண்டால் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு மாளவிகா மோகனன் கேட்டுக்கொண்டுள்ளார்.