தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மாளவிகா. நடிகையாக அறிமுகமாகி பின்னாட்களில் ஐட்டம் டான்சராக மாறி இளசுகள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இன்றும் கனவு ராணியாக வலம் வந்தவர்.
சுந்தர் .சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் இவர் ஒரு அடி எடுத்து வைத்தார். அதன்பின் பல்வேறு சிறப்பு கூறிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதன் காரணமாகவே பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி வந்தார்.
அதுவும் குறையத் தொடங்கவே திருமணம் செய்து கொண்டு தற்போது வெளிநாட்டில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தமிழில் கட்டுவிரியன் படத்திற்கு பிறகு திரையுலகில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார்.
இருப்பினும் நடிகை மாளவிகா அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது தனது உடல் எடையை கூட்டி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.