உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு செம்ம லுக்கு விடும் மாளவிகா.! வைரலாகும் புகைப்படம்.!

malavika
malavika

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் அஜித் உடன் இணைந்து உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அந்த வகையில் இவர் வெற்றி கொடி கட்டு,  சந்திரமுகி,திருட்டு பயலே,வியாபாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தெடங்கினார்.மேலும்  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்துக்கண்டார். தன்னை நம்பி வந்த படங்களுக்கு குத்து டான்ஸ் போட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அப்படி சினிமாவில் சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார் தற்போது தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். தற்பொழுது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இவர் இரண்டு படங்களின்  கதையை  கேட்டுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு செம்ம கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

malavika
malavika
malavika
malavika