தற்போது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்,மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இத்திரைப்படத்திற்கு முன்பே ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தனுசுடன் நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த யுத்ரா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இது ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைதளத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.
அந்தவகையில் நேற்று மாளவிகா டிரக்கிங் சென்றுள்ளார். அவ்வப்போது புலி உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் சிறிது தொலைவில் நின்று போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புல்வெளி நடுவே படுத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் புலியுடன் எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.