குட்டை ட்வுசருடன் அழகான காட்டில் வளம் வரும் மாளவிகா மோகனன்.!

malavika-mohanan-6

ரஜினி, திரிஷா, சசிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் இத்திரைப்படத்தில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவரின் இரண்டாவது திரைப்படமே விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம் ஆனால் அந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் மற்றும் முழு கதை ஆகிவற்றை சொன்னால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.

ஏனென்றால் மாளவிகா மோகனன் விஜயுடன் நடித்து இருந்தாலும் மாஸ்டர் திரைப்படத்தில் சொல்லும் அளவிற்கு அவரின் கதாபாத்திரம் அமையவில்லை ஆனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார். இவரின் நடிப்பு திறமையை பெரிதாக வெளிப்படுத்த முடியாத காரணத்தினால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாளவிகா மோகனன் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள போன்றவற்றிலும் பிசியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாளவிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது, சமீபத்தில் மீன் சமைக்கும் வீடியோ கூட வெளியிட்டிருந்தார்.

malavika-mohana-a
malavika-mohana-a

அந்தவகையில் சுற்றுலா சென்றுள்ள மாளவிகா குட்டையான டவுசரில் ஆறு,கடல் போன்றவற்றில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

malavika-mohan