Malavika Mohanan: ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம் அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் க்யூட்டான வீடியோவை வெளியிட ரசிகர்களை குவித்து வருகின்றனர்.
அதாவது நடிகை மாளவிகா மோகனன் ஒரே ஒரு குச்சியை வைத்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை பெற்று தரவில்லை அப்படி தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக இணைந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் விஜய்யுடன் நடித்ததால் பிரபலமானார்.
மேலும் தனுஷின் மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழனை தொடர்ந்து பாலிவுட்டில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனனை சுமார் 4 மில்லியன் பாலோசர்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சற்று முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களால் பந்து போட அதை ஒரு குச்சியை வைத்து பேட்டிங் செய்வதுபோல் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..