நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் வெளியாகி வெற்றி பெறவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் மூலம் வெற்றியை கண்டுவிட வேண்டும் என்ற முடிவில் விக்ரம் இருந்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனின் இருவரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் பழங்கால கதையை மையமாக வைத்து உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் கெட்ட புகைப்படங்களும் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
அந்த வகையில் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் சொல்லும் அளவிற்கு இடம் பெறவில்லை.
இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தின் நடித்திருந்தார் இவ்வாறு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதனால் மாளவிகாவின் கதாபாத்திரம் சொல்லும் அளவிற்கு அமையவில்லை. எனவே தங்கலான் படத்திலாவது அவருடைய கேரக்டர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அரை உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் சியான் விக்ரம் தான் இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.