ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம் இவருக்கு பெரிதும் அடையாளத்தை பெற்று தந்தது இந்த திரைப்படத்தின் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தனுஷ் உடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் மாளவிகா மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்த பொழுது ரசிகர்கள் சிலர் மாளவிகாவை புகைப்படத்தை எடுத்து அதனை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள்.
அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய முகம் வீங்கி இருந்தது இதன் காரணமாக ரசிகர்கள் மாளவிக்க மோகனுக்கு என்னதான் ஆனது என கேள்வி எழுப்பி வருகிறார்கள் தற்பொழுது மாளவிகா மோகனன் ஏதாவது தவறான சிகிச்சை செய்து கொண்டதால் இவருடைய முகம் வீங்கி இருக்குமோ எனவும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ஏனென்றால் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தவறான சிகிச்சை பெற்றதால் அவருடைய முகம் வீங்கி பக்க விளைவுகளை சந்தித்தது அதேபோலத்தான் இவருக்கும் முகம் வீங்கி இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் வீங்கிய முகத்துடன் குட்டையான கிளாமருடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.