தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன்.
இவர் தமிழில் அறிமுகமாகுவதற்கு முன்பே தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தார். அதன் பிறகுதான் தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுள்ளது.பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு தமிழில் இரண்டாவது படமே தளபதி விஜய்வுடன் இணைந்த நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரைவுலகில் பிரபலமடைந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு ரஜினி,விஜய் ஆகியோர்களை தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாக கோலிவுட்,பாலிவுட், ஹாலிவுட் என இந்திய அளவில் கலக்கி வரும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் மாளவிகா மோகனன் வாரத்திற்கு இரண்டு முறையாவது போட்டோ ஷூட் நடத்தி கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது கையில் கிளாஸ் உடன் பாரில் இருந்தபடி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் ஹாப்பி வேல்ட் ஸ்மைல் டே என்றும் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களும் பல கமெண்டுகளையும் லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.