தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன் இவர் இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.
என்னதான் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு மனைவியாக நடித்து இருந்தாலும் இவர் தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
மேலும் நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார் அந்த வகையில் தளபதி விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் அவருக்கு பெயரும் புகழும் உண்டாகியது தொடர்ந்து அடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் தற்போது தனுஷுடன் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
என்னதான் திரைப்படத்தில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் போட்டோஷூட் மூலம் புகைப்படங்களை வெளியிட்டு அதை மட்டும் நமது நடிகை தவிர்த்தது கிடையாது
இந்நிலையில் திருமண கோலத்தில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் அந்த வகையில் வெள்ளை நிற உடையில் மணப்பெண் போல அமர்ந்திருக்கும் அந்த காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.