தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் இவரின் இரண்டாவது பாடமே தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்பொழுது விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கொடுத்த சில கோபமான எக்ஸ்பிரஷன்களை வைத்து ரசிகர்கள் பப்ளிகாம் சாப்பிடுவது, பல் துலக்குவது, சரக்கு பாட்டிலை ஓபன் செய்வது, பால் பாக்கெட்டை கடிப்பது போன்ற பல மீம்ஸ்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த மாளவிகா மோகனன் சிரித்தே செத்துட்டேன் என்னை சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கை போரடிக்கும் இல்லையா என்றும் கமெண்ட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.