விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா !!காயங்களுடன் புகைப்படம் இதோ.

malavika 1

தமிழ் சினிமாவில்  அஜித் நடிப்பில் 1999ஆம் வெளிவந்த உன்னைத் தேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கி வந்தார்.

பொதுவாக பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்தவகையில் மாளவிகாவும் 2007ஆம் ஆண்டு சுரேஷ்  மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளார்கள்.

திருமணத்திற்குப் பிறகு மாளவிகா திரைப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் மாளவிகா தற்போது சைக்கிளிங் செய்யும்பொழுது விபத்தில் சிக்கிக் கொண்டாராம்.  அந்த விபத்தில் கைவிரல் உடைந்து விட்டதாம் மற்றும் முகத்தில் உள்ள தழும்புகள் இருக்கிறது.அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika