கருவாச்சி போல.. இருந்த மைனா நந்தினி திடீரென ஜொலிக்க காரணம் என்ன.? அவரே சொன்ன ரகசியம்.

maina-nandhini
maina-nandhini

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த சீரியலில் ஒன்று சரவணன் மீனாட்சி. மேலும் இந்த தொடர் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீசன் சீசனாக எடுக்கப்பட்ட வந்தன. அதில் ஒரு சீசனில் ரக்ஷிதா மீனாட்சியாக நடிக்க அவருடன் இணைந்து அவரது தோழியாக  மைனா என்ற கதாபாத்திரத்தில் நந்தினி நடித்திருந்தார்.

இந்த தொடரில் சரவணன் மீனாட்சி கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமோ அதுபோல மைனா கதாபாத்திரமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் இந்த தொடரில் நந்தினியின் மைனா கதாபாத்திரம் ரீச்சானதை தொடர்ந்து அவரைப் பலரும் மைனா நந்தினி எனவே அழைப்பார்கள்.

மேலும் இவர் விஜய் டிவியில் சில காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மற்றும் தற்போதும் சீரியலில் நடித்து வருவது என பிஸியாக உள்ளார். இப்படி சின்னத்திரையில் முக்கிய நாயகியாக வலம் வரும் நந்தினி வெள்ளித்திரையில் வம்சம், நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 போன்ற ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் இவரும் ஒரு ரோலில் நடித்து வருகிறாராம். இவர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது இவர் அவரது கணவருடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல்ஸ் வரை சென்றுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி ரசிகர்களுடன் லைவில் உரையாடும்போது ஒருவர் நந்தினியிடம் கருப்பா இருந்த நீங்கள் இப்படி கலராய் மாறியது எப்படி என கேட்டுள்ளார் அதற்கு அவர் ABC ஜூஸ் தான் என கூறியுள்ளார். ஆப்பிள், கேரட், பீட்ரூட், இஞ்சி, கொத்தமல்லி போன்ற அனைத்தையும் சேர்த்து வாரத்தில் இரண்டு முறை குடித்தால் கலர் மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.