Actress Mahima Nambiar released how she laugh infront of her crush video:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை என்ற திரைப்படத்தில் மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானார்.
இதை தொடர்ந்து இவர் எண்ணமோ நடக்குது, மோசகுட்டியே, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இவர் ஐங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் அது மட்டுமில்லாமல் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உரையாடி கொண்டிருப்பார்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்து வருவார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரண்ட் முன்னாடி எப்படி சிரிப்பார்? கிரஸ் முன்னாடி எப்படி சிரிப்பார்? பெஸ்ட் பிரெண்ட் முன்னர் எப்படி சிரிப்பார்? என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#mahimanambiar#actress pic.twitter.com/OS3PdyIqXW
— Tamil360Newz (@tamil360newz) May 31, 2020