நடிகை மதுமிதா தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருபவர் இவரை மதுமிதா என்று சொன்னால் கூட பலருக்கு தெரியாது ஜாங்கிரி மதுமிதா என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு மிரட்டல், அட்டகத்தி, கண் பேசும் வார்த்தைகள், சொன்னா புரியாது, ராஜா ராணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, நானும் நந்தினியும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தான் மிகவும் பிரபலமானது அதனைத் தொடர்ந்து மாமா மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சந்தானம் போல இவரும் தொலைக்காட்சியில் பிரபலமடைந்து பிறகு தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இப்படி பிரபலமடைந்த ஜாங்கிரி மதுமிதா நடிகைகளைப் போல் தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் மதுமிதாவை ஆத்தாடி ஹீரோயின் போல இருக்கிறாரே என ஆச்சரியம் அடைகிறார்கள்.
At the shoot ❤#Jayatv #ComedyClub #Saraswathipoojaspecial @JayaTvOfficial pic.twitter.com/AKJgOXRszl
— Actor Madhumitha (@ActorMadhumitha) October 9, 2020