விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல புதுமுக நடிகர், நடிகைகள் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை லாஸ்லியா.
இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப் திரைப்படம் ரிலீசாக உள்ளது அதில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், சினிமாவில் முன்னணி நடிகரான அர்ஜுன் மற்றும் காமெடி நடிகரான சிவா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளதால் இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்,பாடல் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது எனவே இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து லாஸ்லியா இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே லாஸ்லியாயாவும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் .அந்த வகையில் மிகவும் மெல்லிய புடவை இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.