அடேங்கப்பா கொழுக்கு மொழுக்கு என இருக்கும் நம்ம லாஸ்லியாவா இது..! சிறுவயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

losliya

actress lossliya teen age photos: இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பிறகு படிப்படியாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் லாஸ்லியா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு லாஸ்லியா விஜய் டிவியில் அறிமுகமான முதல் நாளிலேயே அவருக்கென ஒரு தனி ஆர்மி உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக நடிகை லாஸ்லியா கவர்ந்து விட்டார்.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் சக போட்டியாளராக கலந்து கொண்ட கவின் உடன் காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாகவும் சமூகவலைத்தள பக்கத்தில் பேசப்பட்டன.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு லாஸ்லியாவும் சரி கவினும் சரி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசியதே கிடையாது ஆனால் நடிகை லாஸ்லியா தற்போது சில திரைப் படங்களில் கமிட்டாகி கதாநாயகி என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கூட நடிகை லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்று அவருக்கு மதிப்பை சம்பாதித்துக் கொடுத்தது.

இந்நிலையில் பார்ப்பதற்கு கொழுக்மொழுக்கென  இருக்கும் நமது நடிகை தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படமானது இன்று சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

losliya
losliya