பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லாஸ்லியா இவர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்து விட்டார்.
இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய தான் காரணமாக இவருக்கென மாபெரும் ரசிகர் கூட்டம் திரண்டது மட்டுமல்லாமல். அந்த ரசிகர்கள் ஆர்மியையும் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். அந்தவகையில் லாஸ்லியா தற்போது திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இந்நிலையில் நடிகை லாஸ்லியா பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் தற்போது பிக் பாஸ் புகழ் ஆரியுடன் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன அப்பொழுது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து தி ஃபேமிலி மேன் என்ற திரைப்படத்தில் உங்களை நடிக்க கேட்டால் நீங்கள் நடிக்க ஒப்புக் கொள்வீர்களா என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு பதிலளித்த லாஸ்லியா இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கு மட்டுமின்றி என் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அந்த வகையில் ஈழத் தமிழர்கள் பற்றிய பிரச்சனை குறித்து எந்த ஒரு திரைப்படம் இயக்கினாலும் அதில் நான் நடிக்க மாட்டேன்.
ஏனெனில் இலங்கையில் நடந்த கொடுமையை நான் என் கண்ணெதிரே பார்த்துள்ளேன் அதை திரைப்படமாக எதிர்கொள்வது எனக்கு பிடிக்கவில்லை ஏனெனில் அந்த பிரச்சினைகளும் கொடுமைகளும் என்னால் இன்றும் மறக்கவே முடியாது. ஆகையால் அப்படி வாய்ப்பு கிடைத்தால் நான் அதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என லாஸ்லியா கூறிவிட்டார்.