இலங்கையில் செய்தி வாசிப்பாளராக கால் தடம் பதித்து மீடியா உலகில் அறிமுகம் ஆனார் லாஸ்லியா . பின்பு தமிழில் விஜய் டிவி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
புது பெண் என்பதால் மக்கள் இவரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் திறமை,காதல்,அழகு, போன்றவற்றை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார். மேலும் அவரது அழகும், கொஞ்சும் தமிழும் இளசுகளை அனைவரையும் கட்டி ஈர்த்தது. மேலும் ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மி ஒன்றை உருவாக்கினர்.
இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு எதிர்பார்க்காத பல பட வாய்ப்புகளும் வந்தன. அதில் முதல் படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உடன் இணைந்து “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர்களுடன் இணைந்து சதீஷ், வெட்டுக்கிளி பாலா போன்ற பலர் இணைந்து நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருந்தன.மேலும் தற்போது கே எஸ் ரவிக்குமார் இயக்ககி நடிக்கும் படம் கூகுள் குட்டப்பன் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கதாநாயகியாக லாஸ்லியா நடித்து வருகிறார்.
இதனை அடுத்து வேறு சில படங்களிலும் நடிக்கப் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நடிகை லாஸ்லியா அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித விதமான போட்டோ ஷுட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார் . அந்த வகையில் தற்போது சேலையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.