இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் மீடியா பயணத்தை தொடங்கிய லாஸ்லியா தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக மாறி உள்ளார்.லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து தற்போது நடிகையாக மாறியுள்ளார் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் பல கோடி ரசிகர்களை அந்த சீசனில் கவர்ந்தார்.
பிக் பாஸ் -ல் இருந்து வெளிவந்த அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன அந்த வகையில் தற்போது அவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் யுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் இவர்களுடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் ,காமெடி நடிகர் சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களை கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமிபகாலமாக சில நடிகைகள் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ளவும் மேலும் பட வாய்ப்பை கைப்பற்றவும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம் இந்த பாணியை தற்போது லாஸ்லியா அவர்களும் பின்பற்றி வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் தற்போது அவர் பிங்க் நிற உடையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.