மாடர்ன் டிரஸ்ஸில் தமன்னா போல் போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா.! வர வர உங்க போக்கு வேறமாதிரி இருக்கு..

losliya

இலங்கையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே அறிமுகமாகி பிரபலமடைந்தவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் கொஞ்சும் தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்தது. மேலும் லாஸ்லியாவிற்காக ரசிகர்கள் மத்தியில் ஆர்மி எல்லாம்  உருவாகின.  இந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளர்களில் ஒருவரான கவின் உடன் காதல் வயப்பட்டு..

இவர்களது ரொமென்ஸ் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்தது. பிக் பாஸ் வீட்டில் துருதுருவென ஜாலியாக சுற்றி வந்த லாஸ்லியா.. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து லாஸ்லியா இலங்கை திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தமிழ் நாட்டிலேயே தங்கி தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அப்படி முதல் படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.  அதைத் தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்திலும் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது கொழுக் மொழுக் என்று இருந்த லாஸ்லியா சில மாதங்களாக அவரது உடல் எடையை குறைத்து வருகிறார் அப்படி ஸ்லிம்மாக மாறி அவர் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். தற்போது பிங்க் நிற டிரஸ்ஸில் செம ஸ்டைலாக லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படதை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன இதோ அந்த அழகிய புகைப்படம்.

losliya
losliya