பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் லாஸ்லியா. இந்நிலையில் தற்பொழுது ஒல்லியாக இருந்த லாஸ்லியா லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து மீண்டும் கொழுகொழுவென மாறி உள்ளார்.
லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் அந்த வகையில் இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களின் காதல் திரைப்படத்தில் இடம்பெறும் காதல் காட்சி அளவுக்கு இருந்ததால் இவர்களுக்கென்று தனி ஆர்மி உருவானது இதன் மூலம் பிரபலமடைந்த இவர்கள் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிதாக காதலில் ஆர்வம் செலுத்தாமல் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப் படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தலை நிறைய மல்லிகைப் பூவுடன் கொழுகொழுவென இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.