தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்து அங்கேயே அவரது படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்ததால் இதில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தார் லாஸ்லியா.
பிக் பாஸ் லாஸ்லியா சிறப்பாக விளையாடியது ஒரு பக்கம் இருந்தாலும் சக போட்டியாளராக கவின் உடன் காதல் வயப்பட்டு இவர்களது ரொமான்ஸ் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்டர்டெய்மெண்ட் அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியாவே எதிர்பார்க்காத வகையில் தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் அவரைத்தேடி வந்தன.
அவரைத் தேடிவந்த வாய்ப்பை கைவிடாமல் முதல் படமாக ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தக் கொரோனா காலகட்டத்தினால் டாப் நடிகர்களின் படங்கள் கூட ஒரு சில ஓடிடி தளத்தில் வெளியாகிய நிலையிலும் லாஸ்லியாவின் முதல் படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து படம் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிய வருகிறது. படங்களில் நடிப்பதை தவிர்த்து சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா ரசிகர்களை கவரும் வகையில் மார்டன் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
மேலும் லாஸ்லியா தற்போது அவரது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஸ்லிம்மாக அவர் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது லாஸ்லியா மாடன் என்ற பெயரில் கோட்டை மட்டும் போட்டுக்கொண்டு தனது அழகை காண்பித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.