பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் சினிமாவில் பிரபலமடைந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து நீங்கா இடம் பிடித்துள்ளார் தான் நடிகை லாஸ்லியா.
இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா மற்றும் கவின் காதல் திரைப்படங்களில் இடம்பெறும் காதல் அளவிற்கு இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.
அந்த வகையில் இவர்களுக்கு என்று தனி ஆர்மி உருவானது இவ்வாறு பிரபலம் அடைந்த இவர்கள் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பது போன்று அவர் அவர்கள் செயலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா.
முதலாவதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் தர்ஷன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிஸியாக இருந்து வரும் இவர் தற்பொழுது கொரோனா காரணத்தினால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது எனவே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் லாஸ்லியா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதோடு ரசிகர்களிடம் லைவ் சாட்டிங் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவின் போட்டோ ஷூட் ஒன்றை பார்த்துவிட்டு நீங்கள் ஏன் குக்] வித் கோமாளி அஸ்வினை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதனை பார்த்த மற்ற ரசிகர்கள் அந்த ஜோடியும் மிகவும் அருமையாக அமையும் என்றும் கூறிவருகிறார்கள்.
இந்தக் கேள்விக்கு முக்கிய காரணம் அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து சமீபத்தில் சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்து இருந்தார்கள். இதனைப் பார்த்துவிட்டு தான் உங்கள் இருவரின் ஜோடி மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.