திறமை இருந்தால் சினிமா உலகம் அவர்களை தலையில் தூக்கி வைத்து அழகு பார்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த இலங்கை பெண் லாஸ்லியா தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக தற்பொழுது மாறி உள்ளார்.
இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடர்ந்த லாஸ்லியா அவருக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே அதனை சரியாக பயன்படுத்தினால் நாம் பிரபலமடைந்து விடுவதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கலாம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட லாஸ்லியா அதனை சிறப்பாக செய்து முடித்தார். வெளிவந்த அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது மேலும் சினிமா வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் உடன் இணைந்து இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தில் மேலும் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளிவந்து மக்களை கவர்ந்துள்ளது.
இப்படத்தின் டீசர் வந்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்திய அளவில் தற்போது லாஸ்லியா பிரபலம் அடைந்துள்ளார் என்று கூற வேண்டும் அந்த அளவுக்கு இவர்கள் படத்தின் டீசர் இந்தியா முழுவதும் பல லைக்குகளை பெற்று சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக வந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் லாஸ்லியா அவர்கள் மேலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மேலும் அத்தகைய புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் மாடர்ன் உடையில் மயக்கும் லாஸ்லியா என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.