பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர். உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரொமான்ஸ், காதல், சென்டிமெண்ட் என பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் லாஸ்யா.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் லாஸ்லியா அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில் பிக்பாஸில் இருந்து வெளிவந்த லாஸ்லியா அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்தது. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் உடன் இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
மேலும் இப்படத்தில் முன்னணி ஹீரோவான ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் பல விருது விழா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார்.
இருப்பினும் அவர் அவ்வபொழுது போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அதுபோல இப்பொழுது அவர் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப் படுத்தி வருகிறார்.