சின்னத்திரை பிரபலத்தை பார்த்து “i love u” சொன்ன நடிகை லொஸ்லியா.? வாயடைத்து போன ரசிகர்கள்.!

LOSLIYA-

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல முகம் தெரியாத பிரபலங்கள் தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாஸ்லியா. பின்பு இவர் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இவரது அழகு மற்றும் லாஸ்லியா பேசும் கொஞ்சும் தமிழ் மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்தது அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு உருவாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியா தமிழ் திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அப்படி முதலில் பிரண்ட்ஷிப் என்ற படத்தை கொடுத்திருந்தார் அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா.

படத்தில் பிக்பாஸ் தர்ஷன் உடன்  இணைந்து நடித்து வந்தார் இந்த படமும் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் டிவி பிரபலம் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார். ஆம் விஜய் டிவியில் மிக பாப்புலராக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியா பார்ப்பார் போல..

இதில் கோமாளியாக கலந்து கொண்ட மக்களை என்டர்டைன்மென்ட் செய்துவரும் சிவாங்கி கடந்த மூன்று வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை அதனால் சிவாங்கி ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். இந்தநிலையில் லாஸ்லியாவும் சிவாங்கி ரசிகை போல சிவாங்கி குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு எபிசோடுக்கும்..

sivangi
sivangi

உனது கியூட் ரியாக்சன் பார்த்து நான் அடிமையாகி வருகிறேன் லவ் யூ சோ மச் சிவாங்கி என பதிவிட்டுள்ளார். மேலும் மூன்று வாரங்களுக்குப் பின்பு உன்னை மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்தது சந்தோஷமாக உள்ளது எனவும் இந்த வாரம் ஸ்நேக் பாபு கெட்டப்பில் அச்சோ க்யூட் என பாராட்டியுள்ளார்.