பொது இடத்தில் பிரபல நடிகரை கட்டித்தழுவ முயற்சித்த நடிகை லாஸ்லியா – கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!

losliya
losliya

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரியாத பல பிரபலங்கள் கலந்துகொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் பயணித்து வருகின்றன. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாவது சீசனில் இலங்கையிலிருந்து தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இரு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ரீச் அடைந்து தற்போது சினிமாவில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் லாஸ்லியா முதல் படமாக ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா அண்ணன் தங்கையாக பழகி வந்ததால் இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தார்.

ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாஸ்லியா நாங்கள் நெருக்கமான காட்சிகளை வெறும் காட்சியாக மட்டுமே பார்க்கிறோம் எனவும் கூறியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் கூகுள் குட்டப்பா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் கூகுள் குட்டப்பா படத்தின் பிரஸ்மீட் ஒன்று நடைபெற்றது.

அதில் லாஸ்லியா சற்று தாமதமாக வந்ததால் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஏன் லாஸ்லியா இவ்வளவு லேட் என அதட்டியபடி கேட்டார் அதற்கு அவரை சமாதானப் படுத்துவதற்காக கையை கொடுத்து கட்டியணைக்க லாஸ்லியா நெருங்கி வந்தார். அப்போது கேஎஸ் ரவிக்குமார் சுத்தி கேமரா இருக்கு உனக்கு தெரியலையா என சற்று கோபத்துடன் கேட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகின்றன.