50 வயதிலும் படுமாடர்னாக இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.!!என்னம்மா எப்படி பண்றிங்களேம்மா…

lakshmi-ramakirushnan

பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் மட்டுமே பிரபலமடைய முடியும் என்பது இல்லை குணச்சித்திர நடிகைகளாகவும், துணை நடிகையாகவும் நடித்து வந்த பலரும் தற்பொழுது சினிமாவில் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

அந்த வகையில் ஒருசில குணச்சித்திர நடிகைகளை பல ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாது. தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமடைந்த அவர்தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடித்து வந்த பல திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்து இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து திரைப்படம் நாடோடிகள்.

நாடோடிகள் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் சசிகுமாரின் அம்மாவாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து வேட்டைக்காரன் மற்றும் சென்னையில் ஒரு நாள் ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

lakshmi ramakirushnan
lakshmi ramakirushnan

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் 1984ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட இவரின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தனது 50 வயதிலும் மாடர்ன் உடையில் மாஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

lakshmi ramakirushnan 1
lakshmi ramakirushnan 1