சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமானவுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும்.
இவ்வாறு ஏராளமான நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான மார்க்கெட்டை தக்கவைத்து வந்தாலும் பல நடிகைகள் சில திரைப்படங்களிலேயே நடித்து பிரபலமாகி பிறகு காணாமல் போனவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருபவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இவர் தனது 15 வயதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்கள் நடித்து வந்த இவர் படிப்புக்காக தனது நடிப்பை நிறுத்திவிட்டார்.
எனவே இதனால் பட வாய்ப்புகளும் சரிய தொடங்கிய நிலையில் தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வருகிறது. கிடைக்கும் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது சந்திரமுகி 2, சிப்பாய் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமிமேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மாப்பிள்ளை பிரபல நடிகரான விஷால்தான் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஏற்கனவே விஷால் பல சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.