கேரளாவிலிரந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி இடம் உண்டு, அந்த வகையில் அசின், நயன்தாரா ஆகியோர்களை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனுக்கும் ரசிகர்களிடம் தனி இடம் இருக்கிறது. நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதை வென்றார், இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கும்கி திரைப்படத்தில் அள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், கும்கி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா சிப்பாய், கொம்பன், ரெக்க என பல திரைப்படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் ஒரு காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைய தொடங்கியது அதனால் படத்தில் நடிப்பதை ஒத்திவைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இவருக்கு தற்பொழுது படிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார், இந்த நிலையில் உடல் எடையை குறைத்த லட்சுமிமேனன் பிகினி காட்சியில் நடிக்க ஒப்புக்கண்டாராம், அதுமட்டுமில்லாமல் நீச்சல் கற்றுக் கொள்ளும் பொழுது பிகினி உடையில் வலம் வந்ததால் அது ஒன்றும் தவறாக தெரியவில்லை என முடிவெடுத்துவிட்டார் போல.
மேலும் லட்சுமிமேனனை பிகினி உடையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு தானே இவ்வளவு நாள் காத்திருந்தோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். விரைவில் லட்சுமி மேனன் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கப் போகிறார்.