ACTRESS Laila about ajith’s dheena movie kadhal website onru song: அஜித் குமார் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான படம் தீனா. இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையான லைலா அவர்கள் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் முன்னணி நடிகரான சுரேஷ்கோபி அவர்கள் நடித்திருந்தார். ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தினை இயக்கி அதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக இடம் பெற்றார். மேலும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைப்பாளராக பணியாற்றினார்.
அதுமட்டுமல்லாமல் மேலும் அஜித்திற்கு இப்படத்தில் மூலம் தான் தல என்ற பட்டம் கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தல என்கின்ற அந்த பெயர் தான் இன்றுவரை அஜித்திற்கு மிகவும் பொருத்தமாகவும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு அழைக்கப்பட்டு வரும் பெயராகவும் உள்ளது.மேலும் இப்படத்தில் காதல் வெப்சைட் ஒன்று என்ற பாடல் இடம் பிடித்திருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தப் படத்தின் நடிகையான லைலா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் தீனா படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் காதல் வெப்சைட் ஒன்று என்ற பாடலை எடுக்கும்போது தனக்கு ஜலதோஷத்துடன் கூடிய மிகுந்த காய்ச்சலில் இருந்ததால் இந்த பாடலை படமாக்கும் போது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் இந்த பாடலின் எனெர்ஜி என்னை ஆட வைத்தது என்று கூறியுள்ளார்.
மேலும் அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் போது உங்களுக்கு நடந்த காதல் நினைவுகளை பதிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதை அறிந்த அஜீத் ரசிகர்கள் தீனா படத்தின்போது அவர்களுக்கு நடந்த காதலின் நினைவுகளை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.