இதனால் தான் கிளாமர் படங்களில் நடிக்கவில்லை.! மேலும் பலுன் வெடித்து ஏற்பட்ட விபத்தை கூறிய நடிகை லைலா.!

laila
laila

90 காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லைலா.  இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ரோஜாவனம், தில்,தீனா, நந்தா,பிதாமகன் என ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இவர் தமிழில் அறிமுகமாகுவதற்கு முன்பே இந்தி,தெலுங்கு,உருது, மலையாளம் என பல்வேறு படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் 1996ஆம் ஆண்டு இந்தியில் வெளியான துஷ்மன் துனியா கா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து உள்ளார்.

பிறகு தமிழில் விஜயகாந்த்,அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.  இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த வந்தார்.

பிறகு இறுதியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றார்.  இவர் 2006ஆம் ஆண்டு லைலா 8 வருடங்களாக காதலித்து வந்த தனது காதலர் இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.  அந்த வகையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.  அதாவது நடிகர் கார்த்திக் நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீப பேட்டி ஒன்றில் லைலா இதனைப் பற்றி கூறியிருந்தார்.

அதில் சென்னை என் மனதுக்கு நெருக்கமான ஊர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் எங்கே இருக்கிறார்கள்.  நான் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி சென்னை வந்து தனது தோழிகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

பாலிவுட் காமெடி நடிகர் தான் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது ஆனால் எனக்கு கிளாமர் டிரஸ் செட் ஆகவில்லை இதன் காரணமாக  ஹோம்லி ரோலில் நடித்தேன்.  இதன் காரணமாக சில திரைப்படங்களின் பட வாய்ப்பையும் தவற விட்டேன். Naa Hrudayamlo Nidurinche cheli எங்க தெலுங்கு திரைப்படம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதாவது படத்தில் நான் கேக் கட் பண்ற மாதிரி ஒரு சீன் வரும் அப்போ ஹீலியம் பலூன் வெடிக்க வைக்கும் திட்டம் போட்டு இருந்தார்கள். எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் அந்த பலூன் வெடித்ததில் எப்படியோ காயம் இல்லாமல் தப்பித்தேன்.  இவ்வாறு அந்த பலூன் வெடித்ததை என்னால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை எனவே கொஞ்ச நாட்கள் ஷூட்டிங் போகாமல் இருந்தேன் பிறகு என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன் பிறகுதான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். இன்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் லைலா.