22 வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை லைலா.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

laila
laila

சில நடிகைகள் மட்டும் வயதானாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்கள் அந்த வகையில் தனது அழகான நடிப்பு திறமையினாலும் வெகுளியான பார்வையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை லைலா. இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அந்த வகையில் சூர்யா, அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை லைலா கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் 2006ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

பிறகு சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார் எப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.  அதாவது சில சீரியல்களில் தற்பொழுது இவர் சிறப்பான தோற்றத்தில் என்றி கொடுக்கவுள்ளார். இவர் 22 வருடங்களுக்குப் பிறகு பிரசாந்தை சந்தித்துள்ளார்.

நடிகர் பிரசாந்த் மற்றும் லைலா இருவரும் இணைந்து நடித்து இருந்த பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இன்றைய பதிவிட்டு பிரசாதத்தை சந்தித்ததாக கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் பிரசாந்த் மற்றும்  லைலா இருவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் மற்றும் லைலா இருவரும் ஜோடியாக நடிப்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல் அதிக எதிர்பார்ப்புடன் இருந்த வருகிறார்கள் இதனை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறிவருகிறார்கள்.